ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்.. மயிலாடுதுறையில் இங்கெல்லாம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்.. மயிலாடுதுறையில் இங்கெல்லாம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி விடுமுறை

பள்ளி விடுமுறை

பல இடங்களில் நீர் தேங்கியிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத மழையால் ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல இடங்களில் நீர் தேங்கியிருப்பதால், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Heavy rain, School