ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

இளம்பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

இளம்பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் 5 பேரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மயிலாடுதுறை தாலுகா செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிராமி (25), இவர் மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன்-புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் வினோத்குமார் என்பவரை 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர், கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வினோத்குமாரை பிரிந்து, சென்னை சென்று அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் அபிராமி.

  இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பரின் வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த வினோத்குமார் கடந்த 24-ஆம் தேதி தனது தாய் புஷ்பவல்லியின் நண்பரான காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக், விஜயேந்திரன் மனைவி புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் மகள் திவ்யா ஆகிய 5 பேர் அங்கு சென்று அபிராமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

  இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி அளித்த புகாரின்பேரில் 5 பேரின் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ராதாகிருஷ்ணன் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Mayiladuthurai, Police Inspector