ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

மண்சாலையை சீரமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்..

மண்சாலையை சீரமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்..

நாற்று நட்டு போராட்டம்

நாற்று நட்டு போராட்டம்

சம்பவம் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பெரம்பூர் காவல் துறை உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாளில் சரி செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதியளித்தனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

   சேத்தூர் ஊராட்சியில் மண்சாலையை சீரமைத்து தரக்கோரி சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு  பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சேத்தூர் ஊராட்சி 5-வது வார்டு மஞ்சகொல்லை தெரு பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. இந்த பகுதியில் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் சாலை சேரும் சகதியுமாக மாறிப் போவது  வாடிக்கையாக உள்ளது. புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  ஆனால் இதுவரை சாலை செப்பனிடப்படவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக மாறி மழைநீர் தேங்கி குழம்போல் காட்சியளித்தது. சாலை குண்டும் குழியுமாக  மாறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதிய தார் சாலை அமைத்து தரக் கோரியும் தற்காலிகமாக சாலையை செப்பனிட வலியுறுத்தியும் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Read More : ’வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை’ - வேலை தேடுபவர்களை குறிவைத்து ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

  சம்பவம் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பெரம்பூர் காவல் துறை உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாளில் சரி செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  மஞ்சகொல்லை தெருவிற்கு செல்லும் மண்சாலையில் இரண்டு தனி நபர்களுக்கு சொந்தமான இடமும் இருப்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Lack of road facility, Mayiladuthurai