Home /News /mayiladuthurai /

அதிக வட்டி கொடுப்பதாக ரூ.60 லட்சம் மோசடி...அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் மீது வணிகர்கள் புகார்...

அதிக வட்டி கொடுப்பதாக ரூ.60 லட்சம் மோசடி...அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் மீது வணிகர்கள் புகார்...

அமுதசிரபி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்

அமுதசிரபி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்

Mayiladuthurai | அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.60லட்சம் ஏமாற்றப்பட்டதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே அறிமுகம் செய்து பணம் வசூலித்து வருகின்றது. நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டினால் ஒரு வருட காலத்திற்கு முதிர்வு தொகை ரூபாய் 36,000 கொடுப்பதற்கு பதில் வட்டியுடன் 37,300 ரூபாய் கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று பணம் வசூலித்து வருகின்றனர்.

இவர்களது திட்டங்களை நம்பி சீர்காழி தாலுக்கா பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்  சேர்ந்துள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் முதிர்வு தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட காசோலை வங்கிகளில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நாடி தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனம் தங்கள் நிறுவனம் பிரச்சனையில் உள்ளதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து  கடந்த ஒரு வார காலங்களுக்கு மேலாக அந்த நிறுவனம் பூட்டியே கிடப்பதாகவும், தொலைபேசி வாயிலாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டால் சரியான பதில் அளிக்காததால் மக்கள் அச்சமடைந்தனர்.

Also see... கனமழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு...

அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளராக  சேர்ந்த இருவதுக்கும் மேற்பட்டோர்  சீர்காழி காவல் நிலையத்தில்  ஒன்றிணைந்து அமுத்சுரபி நிறுவனத்தால் ரூ.60லட்சம் வரை ஏமாற்றப்பட்டதாக கூறி புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் மணிமாறன் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இந்த அமுத்சுரபி நிறுவனத்திற்கு தமிழக முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, Crime News, Mayiladuthurai

அடுத்த செய்தி