ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ration Card : நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டிருந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கனமழை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

  வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அப்போது சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்தது.

  Also Read :  பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை - அண்ணாமலை உத்தரவு

  இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டிருந்தார்

  இதையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Heavy Rains