திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்றும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் மயிலாடுதுறை அருகே மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம் சாட்டி பேசினார்.
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், பெரம்பூர், சேத்தூர், அனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், திமுக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கூட்டு பாலியல் வன்முறைகள் பெருகிவிட்டன. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் சுலபத்தில் கிடைக்கும் பொருள்களாக மாறிவிட்டன என குற்றம்சாட்டிப் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் செய்தியாளர்கனை சந்தித்த ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை இல்லாத இடமே இல்லை என்கிற அளவுக்கு பெருகிவிட்டது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்கிற நிலையை தாண்டி முற்றிலும் இல்லை என்கிற நிலைக்கு சென்றுவிட்டது.
Must Read : பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை
தனியார் உரக்கடைகளில் யூரியா கிடைக்கிறது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்.கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் - ஜி.கிருஷ்ணகுமார்.
உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.