Home /News /mayiladuthurai /

திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பலி - சோக சம்பவம்

திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பலி - சோக சம்பவம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த அன்பழகி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த அன்பழகி

அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள் மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருடர்களிடம் இருந்து பொருட்களை காப்பாற்ற பீரோ மீது மின்சாரம் பாய்ச்சிய தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்தவர் அன்பழகி(68). இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள் மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஸ்கூட்டியில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிய கும்பல்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை

    இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி  மின் இணைப்பை நிறுத்தாமல் வீட்டு வாசலில் கோலமிட்டு பின்னர்  பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



    தகவலின் பெயரில் அங்கு வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து  திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Nagai district, Sirkazhi

    அடுத்த செய்தி