ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை அடித்து விரட்டிய மகன்... எஸ்.பியிடம் தம்பதி புகார்

சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை அடித்து விரட்டிய மகன்... எஸ்.பியிடம் தம்பதி புகார்

மகன் மீது புகார் கொடுத்த பெற்றோர்

மகன் மீது புகார் கொடுத்த பெற்றோர்

Mayiladuthurai | தங்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்மீது நடவடிக்கை எடுத்து, தங்களது நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கசாமி(85) சாரதாம்பாள்(75) தம்பதியினர். இவர்களுக்கு 4 மகன்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு தனது 4 மகன்களுக்கும் தலா 4  விவசாய நிலத்தையும், குடியிருக்க மனையையும் பிரித்து தங்கசாமி சொத்து எழுதித் தந்துள்ளார். மேலும் தனக்கென 4 மா நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையையும் வைத்துக்கொண்ட தங்கசாமி அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்தமகன் உத்திராபதி தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயரில் மாற்றி எழுதிக்கொண்டுள்ளார். அதன்பின்னர், பெற்றோரை அவர்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உத்திராபதி பொருட்படுத்தாமல் தனது பெற்றோரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். தங்கசாமி தனது சொத்துக்களை பெரிய மகனுக்கு மட்டும் எழுதித்தந்துவிட்டதால் அவரை பராமரிக்க மற்ற மகன்களும் மறுத்துவிட்டனர்.

Also see...நகை கடையில் அரங்கேறிய நூதன கொள்ளை.. பெண் செய்த தில்லாலங்கடி வேலை..!

இதையடுத்து தம்பதியினர் இருவரும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே தங்கி தங்களது முதுமைக் காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்மீது நடவடிக்கை எடுத்து, தங்களது நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தம்பதியினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அம்மனுவின்மீது விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Mayiladuthurai, Parents, Property