ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

உணவுக்காக வீடுகளை சேதப்படுத்தி அச்சுறுத்தும் குரங்குகள்.. கதிகலங்கி நிற்கும் கிராமமக்கள்

உணவுக்காக வீடுகளை சேதப்படுத்தி அச்சுறுத்தும் குரங்குகள்.. கதிகலங்கி நிற்கும் கிராமமக்கள்

மயிலாடுதுறையில் குரங்குகள் செய்யும் சேட்டைகள்

மயிலாடுதுறையில் குரங்குகள் செய்யும் சேட்டைகள்

Mayiladuthurai | குரங்குகளின் அட்டூழியத்தால்  5 வருடங்களாக பயத்தில் வாழும் சித்தமல்லி கிராமமக்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லத்தெரு, தோப்புதெரு, பெரியதெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குரங்குகளின் சேட்டைகளால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக விழிபிதுங்கி கடும் அவதிக்குள்ளாகி வருவதாக இந்த கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் கிராமத்தில்  தினந்தோறும் அதிகாலையில் வரும் குரங்குகள் வீடுகளின் மீது தாவி குதிப்பதும் கூறைவீடுகளை பிய்த்து எரிந்து சேதப்படுத்தி உள்ளே புகுந்து சமைத்து வைத்துள்ள உணவுகளை தின்றுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் வருகிறது.

  ஓட்டு வீடுகளையும் விட்டுவைக்காமல் ஓடுகளை கீழேதள்ளி வீட்டின் உள்ளே சென்று அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டின் உள்ளே புகுந்து விடுவதாக கூறும் கிராம மக்கள் குரங்குகளுக்கு அஞ்சி கூறைவீட்டில் உள்ள இடுக்குகளை குரங்குகள் உள்ளே செல்லாதவாறு வேலி முட்களால் அடைத்து வைத்துள்ளனர்.

  சிறு குழந்தைகளை விரட்டுவதால் குழந்தைகளை தெருவில் விளையாட கூட விடாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குரங்குகளின் சேட்டையால் தினந்தோறும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக கூறும் இந்த  கிராமமக்கள் குரங்குகளை  பிடிக்க நடவடிக்கை எடுக்ககோரி கிராமசபை கூட்டத்தில், ஊராட்சிமன்றத்தில், அரசு அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர்.

  ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.  வீடுகளின் பின்புறம் உள்ள பெரிய பெரிய மரங்களில் தங்கி வாழ்ந்து வரும் குரங்குகள் ஏராளமான குட்டிகளை ஈன்று வருவதால் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உணவுக்காக  சர்வ சாதாரணமாக வீடுகளின் உள்ளே புகுந்து விடுவதாக கூறுகின்றனர்.

  Also see... இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதோ..! எவ்வளவு தெரியுமா?

  குரங்குகளின் தொல்லை தாங்காமல் அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் லலிதாவிடம் நேரிடையாக புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Mayiladuthurai, Monkey