Home /News /mayiladuthurai /

சீர்காழியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர்...

சீர்காழியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர்...

அதிகாரிகளை கடிந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு

அதிகாரிகளை கடிந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு

சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியை ஆய்வு செய்யும் போது அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளை கடிந்து பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் தருமை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார். முதலில் தருமை ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வருகை புரிந்த அவர் அங்கு சாமி தரிசனம் செய்து கோவில் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்காடு சுவேதாரனேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் கோவிலை சுற்றி நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் வரைபடங்கள் மற்றும் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Also see... முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..

பின்னர் திருவெண்காடு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் பள்ளியை சீரமைக்க உத்தரவிட்டதாகவும் ஆனால் இதுவரையில் சீரமைப்பு பணி சரிவர முடிக்கவில்லை என  அதிகாரிகளை கடிந்து பேசினார். மேலும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Govt School, HRNC, Mayiladuthurai, Minister Sekar Babu, Sirkazhi

அடுத்த செய்தி