ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரம்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரம்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

இளைஞர் கொலை

இளைஞர் கொலை

Murder | மயிலாடுதுறையில் இளைஞரை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டு தற்கொலை நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai | Tamil Nadu

  மயிலாடுதுறை அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசி சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

  மயிலாடுதுறை மூவலூர் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (20) மறையூரை சேர்ந்த சுரேஷ் மேஸ்திரி என்பவரிடம் சித்தாள் வேலைக்கு சென்று வந்ததுள்ளார். கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் காலை அவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் கபிலன் என்பவரும், 17 வயது சிறுவன் ஒருவரும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கபிலனுக்கும் பள்ளி மாணவருக்கும் இடையே நெடுநாட்களாக ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரையும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி அன்று இரவு ஏற்கனவே மது போதையில் இருந்த ராஜ்குமாரை மஞ்சளாறு பாலத்தின் தண்டவாளத்திற்கு அழைத்து சென்று, மேலும் மதுவை ஊற்றி கொடுத்து, அதிக போதைக்குள்ளாக்கியுள்ளனர்.

  ALSO READ | விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு! சிறுமியின் உயிரைப் பறித்த லிஃப்ட்!

  அப்போது ராஜ்குமாரின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக்கி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்கு இருவரும்  ராஜ்குமாரை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு ராஜ்குமார் ஒத்துக் கொள்ளாததால் கபிலன் பீர் பாட்டிலால் ராஜ்குமார் தலையில் அடித்துள்ளார். ராஜ்குமார் தப்பியோட முயன்றபோது தங்களின் ஓரினச் சேர்க்கை விபரம் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என்று பயந்துள்ளனர். ராஜ்குமாரை ரயில் தண்டவாளத்தில்  தள்ளி உடைந்த பீர் பாட்டிலால் தலையில் குத்தியும், கருங்கல்லால் தலையில் தாக்கியும்  கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுவிட்டு ரயிலில் அடிபட்டு இறந்ததாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Homosex, Mayiladuthurai, Murder