ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

மதுபோதையில் பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்... மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

மதுபோதையில் பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்... மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

கைதான இளைஞர்

கைதான இளைஞர்

மதுபோதையில் பேரனே பாட்டியை கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் மகன் முத்துக்குமாரசாமி(30) கூலி தொழிலாளி. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதுபோல நேற்று மாலை முத்துக்குமாரசாமி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.

  அதனை அவரது தந்தை வழி பாட்டியான கலியபெருமாள் மனைவி ஆச்சியம்மாள் (70). என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ததில் ஆச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீசார் விரைந்து வந்து ஆட்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன்,  முத்துக்குமாரசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : கிருஷ்ணகுமார் ( மயிலாடுதுறை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Local News, Mayiladuthurai