அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி, மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மயிலாடுதுறை வட்டத்துக்கு உட்பட்ட பட்டவர்த்தி கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி, அவரது புகைப்படத்தை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை செலுத்த முற்பட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கலவரம் வெடித்தது.
இந்நிலையில், தலைஞாயிறு கிராமத்தில் உள்ள மதகடி பகுதியில் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி, இன்று அவரின் உருவப்படம் வைத்து, மரியாதை செலுத்த அனுமதி வழங்க விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு மற்றொரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பட்டவர்த்தி மதகடி பிரதான சாலையில் மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சியின் அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.
இதனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தலைஞாயிறு கிராமத்தில் மதகடி பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா பிறப்பித்துள்ளார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க | திருமண தடை அகல வேண்டுமா? கட்டாயம் சீர்காழியில் உள்ள இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!
மேலும், இருவருக்கு மேல் அப்பகுதியில் கூடக் கூடாது என்றும், புதியதாக சிலைகள், பேனர்கள், கொடிக் கம்பங்கள் நடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சேலம் சுந்தர் லாட்ஜ் பகுதியில் மேம்பால பணிக்காக அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டு, அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அப்பகுதியில் விசிக சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
ஆனால், அங்கு பேனர் வைக்க யாருக்கும் அனுமதியில்லை என கூறி போலீசார், அதை அகற்ற வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும் - விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், விசிகவினரே, தாங்கள் வைத்த பேனரை அகற்றினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Lockdown, Mayiladuthurai