ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை!

கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை!

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

School Leave : கனமழை காரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை நீரை அகற்றும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பொழிந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளிலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : தமிழகத்தில் 17ஆம் தேதிவரை தொடர்மழை : வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட்

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழை காரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை நீரை பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை (14-11-2022) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

  குன்றத்தூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை

  அதேபோல திங்கள் கிழமை (14.11.2022) மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Mayiladuthurai, School Leave, Weather News in Tamil