மயிலாடுதுறை அருகே கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும், உறவுகளின் மேன்மையையும் இளம்தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், பள்ளி மாணவர்களை ஆதரவற்ற முதியவர்களுடன் அழைத்து சென்று "வாரிசு" திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உறவுகளின் மேன்மையை தெரியவைக்கும் விதமாகவும், கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை விளக்கும் விதமாகவும், மயிலாடுதுறையில் செயல்படும் தனியார் பள்ளியான ஈரோகிட்ஸ் என்ற பள்ளியின் நிர்வாகத்தினர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, இப்பள்ளியில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 60 பேரை, பள்ளியின் அருகில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசிக்கும் 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகளுடன் அழைத்து வந்து வாரிசு திரைப்படத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதன்மூலம் குழந்தைகள் குடும்ப உறவுகளின் மாண்பினையும், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்வதோடு, தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர் மற்றும் மூதாட்டிகளும் குழந்தைகளோடு இணைந்து வெளியில் வந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆதரவற்ற முதியவர்களின் பலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் பார்ப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai, School students, Varisu