ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மீனவர்: உதவிவேண்டி அரசுக்கு கோரிக்கை!

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மீனவர்: உதவிவேண்டி அரசுக்கு கோரிக்கை!

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல்

இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மீனவர் வீரவேலுக்கு அரசு அறிவித்த எந்தவொரு உதவியும் கிடைக்கப்பெறவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு செய்யப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர் வீரவேல் மனைவிக்கு அரசு வேலை வழங்கி வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வீரவேல் (35 ). இவருக்கு மதுமதி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இவர் கடந்த  அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி  காரைக்காலைச் சேர்ந்த செல்வம் என்பவரது விசைப்படகில் 10 பேருடன்,  கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளார்.

அப்போழுது  21 ஆம் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வீரவேல் படகு மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  வீரவேல் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் அங்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தனது சிகிச்சைக்காக அரசு கொடுத்த ரூ.2 லட்சத்தை பெற்று  முழுமையாக அங்கேயே செலவு செய்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  வீடு திரும்பி உள்ள வீரவேல் படுகாயம் காரணமாக திரவ ஆகாரங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார்.  மேலும்  இவர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல  கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன்,  தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீரவேலின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும்  வீரவேல் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கூறிய வீரவேலின் மனைவி மதுமதி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து தனது கணவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி மூன்று மாதங்கள் ஆவதாகவும், வீட்டிற்கு வந்ததிலிருந்து கழிவறைக்கு அவரை அழைத்துச் செல்வதிலிருந்து அனைத்து வேலைகளையும் செய்வதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் அரசு அறிவித்த எந்த உதவிகளும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை எனவும்  வீரவேல் மருத்துவமனையில் இருக்கும்போது மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்த்தார். அப்போது வீரவேல் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதுவரையில் மருத்துவ செலவிற்கு கையில் பணம் இல்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போதும் குழந்தையை மருத்துவமனை கொண்டு சென்று காட்ட பணம் இல்லாததால் முடியவில்லை எனவும் கவலை தெரிவித்த மதுமதி, ‘குண்டடிபட்ட வீரவே  வேலை மறுசிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட பணம் இல்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அனைவரும் வந்து பார்த்து சென்றனர். தற்பொழுது வீட்டிற்கு வந்த பிறகு யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

First published:

Tags: Fisherman, Mayiladuthurai