முகப்பு /செய்தி /Mayiladuthurai / மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (16-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (16-07-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Mayiladuthurai District : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் மற்றும் கிடாரம்கொண்டான் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை (16.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதில், “ கடலங்குடி 230 கே வி துணை மின் நிலையத்தில் புதிதாக கெபாசிட்டர் பேங்க் நிறுவும் பணி மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த மின் நிலையத்திலிருந்து பயன்பெறும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பொறையார், ஆச்சாள்புரம், அரசூர்,எடமணல் மற்றும் கிடாரம் கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு 16.07.2022 அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்” என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Also see... வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்!

top videos

    இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    First published:

    Tags: Mayiladuthurai, Power cut, Sirkazhi