ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

ஓட்டுநர் இன்றி தானாக ஓடி விபத்துக்குள்ளான அரசு பேருந்து... மயிலாடுதுறையில் அதிர்ச்சி!

ஓட்டுநர் இன்றி தானாக ஓடி விபத்துக்குள்ளான அரசு பேருந்து... மயிலாடுதுறையில் அதிர்ச்சி!

விபத்துக்குள்ளான பேருந்து

விபத்துக்குள்ளான பேருந்து

Mayiladuthurai bus accident | திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து தானாக இயங்கி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறையில் ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடி மதில் சுவரில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தந்தது. பயணிகள் இறங்கி சென்ற பின்பு ஓட்டுநர் பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து தானாக இயங்கத் துவங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து பேருந்து 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி நின்றது.

இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர்ந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பேருந்தின் உள்ளே யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை.

First published:

Tags: Bus accident, Local News, Mayiladuthurai