முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / கொள்ளிடம் பஞ்சாயத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

கொள்ளிடம் பஞ்சாயத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் ஒதுக்குவதாகவும், கட்டப்படாத வீடுகளுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களில்  முறைகேடுகள் நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஞ்சாயத்தில் மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு நடைபெறுவதாக அதே மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல மனுவில், கொள்ளிடம் பஞ்சாயத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கவிதா என்பவர், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

அதில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் ஒதுக்குவதாகவும், கட்டப்படாத வீடுகளுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: வீடியோ: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்விக்கு நக்கலாக பதில் கொடுத்த டி.ஆர்.எஸ் கட்சி!

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சி.டி.ஜான்சன், எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள், கண்காணிப்பாளர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்ததனர். இதனையடுத்து இது குறித்து மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Central govt, Chennai High court, Govt Scheme, Mayiladuthurai