ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

அலையாத்தி காடுகளில் மீன் வளர்ப்பு... அதிக லாபம் ஈட்டும் விவசாயி...

அலையாத்தி காடுகளில் மீன் வளர்ப்பு... அதிக லாபம் ஈட்டும் விவசாயி...

அலையாத்தி காடுகளில் மீன் விவசாயம்

அலையாத்தி காடுகளில் மீன் விவசாயம்

Man makes a profitable business in fish farming at Wandering Forest | சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் அலையாத்தி காடுகளால் பொதுமக்களை காக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். எனவே இந்த முறையை அரசு ஊக்குவிக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India

சென்னையை சேர்ந்தவர் இளஞ்செழியன். கடல்சார் படிப்பில் முதுநிலை பட்டம் படித்துள்ளார். ஒன்றை ஒன்று உட்கொண்டு வளர்ச்சி அடையும் கடல்வாழ் உயிரினங்களை வளர்க்க ஆர்வம் கொண்டவர். இதனால் சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி முதலில் இறால் குட்டைகளை நிறுவினார்.

இதில் இறால் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். அப்பொழுது இறால்களுக்கு வரும் நோயால் அதிக அளவு இறால்கள் அழிந்ததாலும், இதனால் உண்டாகும் தீமைகளை கருத்தில் கொண்டும் மாற்று தொழில் செய்ய முடிவு செய்தபோது அலையாத்தி காடுகளுக்கு நடுவே கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்க்க முடிவு செய்தார்.

இதற்கு தனது 15 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை தானியங்கி முறையில் சுழற்சியாக தண்ணீர் வெளியேறி உள்ளே வரும்படி வடிவமைத்து அதில் இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பு அரணாக விளங்கும் அலையாத்தி காடுகளை வளர்க்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 2006ம் ஆண்டு 1800 அலையாத்தி செடிகளை வாங்கி வளர்த்தார். செடிகள் வளரும் வரை மற்றொருபுறம் திறந்தவெளியில் குட்டைகள் அமைத்து கொடுவா மீன், கல் நண்டுகளை வளர்த்து வந்தார்.

Also Read : 290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

திறந்தவெளியில் தனது உயிரினத்தையே ஒன்றை ஒன்று உட்கொண்டு வளர்ச்சி அடையும் கல் நண்டு மற்றும் கொடுவா மீன்கள் அதிகளவு வளர்ச்சி அடையாமல் உற்பத்தி பாதித்து குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து தான் உருவாக்கிய அலையாத்தி காடுகளுக்கு நடுவே கல் நண்டையும், கொடுவா மீனையும் வளர்க்க தொடங்கினார்.  அலையாத்தி காடுகளின் வேர்களுக்கு இடையே கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்ச்சி, உற்பத்தி சதவீதம் அதிகரித்தது.  வருடத்திற்கு ஒருமுறை மீன்கள், கல் நண்டுகள் பெரிதானதும் அவற்றைப் பிடித்து மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் விற்பனை செய்து  வருகிறார்.

எரிபொருள், மின்சாரம் ஏதுமின்றி  இயற்கையான முறையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அலையாத்தி காடுகள் நடுவில் கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டி வரும் அவர் இதுபோன்ற முறையை கடலோர பகுதிகளில் பின்பற்ற அரசு மானியம் வழங்கினால் மற்றவர்கள் இந்த முறையை பின்பற்ற முன்வருவார்கள்.

சுனாமி போன்ற இயற்கை பேர்டர் காலத்தில்  அலையாத்தி காடுகளால் பொதுமக்களை காக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். எனவே இந்த முறையை அரசு ஊக்குவிக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read : சூடா ஒரு மூலிகை தேநீர் போதும்! மழைக்கால நோயெல்லாம் தூரம் ஓடும்!

இதுகுறித்து இளஞ்செழியன் கூறுகையில், “15 ஏக்கர் நிலத்தில்  இறால் வளர்ப்பில் ஈடுபட்டேன். அப்போது இறால்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் அதில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இதனால் மாற்றுத்தொழில் செய்ய முடிவு செய்தேன். இருக்கிற இடத்தை வைத்து எவ்வாறு லாபம் ஈட்டலாம் என எண்ணியபோது அலையாத்தி காடுகளுக்கு நடுவே கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்க்க முடிவு செய்தேன். இந்த முறையில் மூன்று பயன்பாடுகள் உள்ளது. அதாவது இந்த முறையில் தண்ணீர் இறைப்பதற்கு பம்ப் தேவையில்லை. ஆற்றில் நீர் ஏறும்போதும், இறங்கும்போதும் தானியங்கி முறையில் நீர் மறுசுழற்சி உருவாவதால் நீரின் தன்மை மாறாமல் உள்ளது. இந்த அலையாத்தி காடுகள் அதிகளவில் ஆக்சிஜன் வெளியிடுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மூன்றாவதாக இந்த முறையில் கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்ப்பதால் வருமானமும் கிடைக்கும் என்று முடிவு செய்து இந்த முறையை செய்து வருகிறேன்.

கொடுவா மீன் மற்றும் கல் நண்டு தனது இனத்தையே அழித்து சாப்பிடும் குணம் கொண்டவை. திறந்தவெளியில் நாம் குட்டை அமைத்து இதனை வளர்த்தால்  உற்பத்தி குறைவு ஏற்படும். ஆனால் இந்த அலையாத்தி காடுகளின் நடுவே நாம் வளர்க்கும்பொழுது  பெரிய மீன் மற்றும் கல் நண்டுகளில் இருந்து சிறிய வகை மீன்கள் மற்றும் நண்டுகள் தங்களை தற்காத்து கொள்ள வேர்களில் சென்று தஞ்சமடைவதால்  மீன்களின் வளர்ச்சி அதிகரித்து உற்பத்தி அதிகரிகிறது.

இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகிறது.  ரூ.7 லட்சம் வரை  விற்பனை செய்யலாம். லாபம் ரூ.4 லட்சம் வரை கிடைக்கும். கடற்கரையோரங்களில் அதிக அளவு வெற்று நிலப்பரப்புகள் இருப்பதால் அந்த இடங்களில்  இந்த முறையை பின்பற்ற அரசு மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் அதிகம் பேர் இந்த முறையை பின்பற்ற முன்வருவார்கள்,” என தெரிவித்தார்

ஒருபுறம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும், மற்றொருபுறம் இயற்கை ஆர்வலராகவும்  எரிபொருள் மின்சாரம் செலவும் இன்றி ஒரு ஏக்கர் நிலத்தில் வருடத்திற்கு ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் இந்த விவசாயியை நாமும் பாராட்டுவோம்.

Published by:Raj Kumar
First published:

Tags: Farmer, Fish, Fishermen, Local News, Sirkazhi