Home /News /mayiladuthurai /

பாஜக நிர்வாகியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்.. லோன் ஆப் கும்பல் சிக்குமா?

பாஜக நிர்வாகியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்.. லோன் ஆப் கும்பல் சிக்குமா?

லோன் ஆப் மோசடி

லோன் ஆப் மோசடி

பாஜக மாவட்ட நிர்வாகியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளிட்டு லோன் ஆப் நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். மோசடி வலையில் பாஜக நிர்வாகி சிக்கியது எப்படி?

லோன் - ஆப் நிறுவனத்தின் மிரட்டலுக்கு பணியாத பாஜக நிர்வாகியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரியாசுதீன். பாஜக மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளராகவும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் உறுப்பினராகவும் இருக்கிறார். முகமது ரியாசுதீன் new cash என்ற லோன் ஆப் மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளித்துள்ளார்.ஆனால் இவரின் ஆவணங்களை பெற்றுக்கொண்ட லோன் ஆப் நிறுவனம், பணம் ஏதும் வழங்கவில்லை.

சில நாட்கள் கடந்த நிலையில் திடீரென ரியாசுதீன் செல்போனுக்கு தொடர்பு கொண்ட லோன் ஆப் நிறுவனத்தினர், தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறு கேட்டுள்ளனர். அதற்கு ரியாசுதீன் தங்களிடம் நான் பணம் பெறவே இல்லையே எனக்கூறியிருக்கிறார். செல்போனில் பேசிய அந்த நபர் பணத்தை வாங்காவிட்டாலும் பணம் கொடுக்க வேண்டும்.பணம் கொடுக்காவிட்டால் உங்களது ஆபாச புகைப்படங்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

Also Read: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவி பாலியல் பலாத்காரம்... நண்பருடன் தொழிலதிபர் கைது

ரியாசுதீனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிட்டி உள்ளனர். அதன் பின்னரும் அவர் பணம் கொடுக்காததால் ரியாசுதீனின் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தை அவரது செல்போனில் கான்டக்ட் லிஸ்டில் உள்ள எண்களுக்கு அனுப்பியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த ரியாசுதீன் இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரியாசுதீன் கடன் வாங்குவதற்காக தேர்வு செய்த new cash என்ற லோன் ஆப் செயலி மோசடியானது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பாலும் லோன் ஆப் நிறுவனங்கள் கடன் கொடுத்த பின்னர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவார்கள். ஆனால் new cash போன்றவை கூகுள் பிளே ஸ்டோரில் வெறும் செயலியை மட்டும் வைத்துக் கொண்டு கடன் கொடுப்பதாக கூறி, பணமே கொடுக்காமல் மிரட்டும் மோசடி நபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

new cash போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது நமது செல்போன் தகவல்களை அவர்கள் திருடி விடுகின்றனர். பின்னர் அதை வைத்தே நம்மை மிரட்டுகின்றனர். new cash போன்ற மோசடி லோன் ஆப் குறித்து பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: BJP, Loan, Loan app, Mayiladuthurai

அடுத்த செய்தி