மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மீனவர் வீரக்குமாருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கடற்படை அளித்துள்ள விளக்கத்தில், இந்தியா-இலங்கை சர்வதேச எல்லைக்கு அருகே பால்க் விரிகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான படகு தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் மீனவர்கள் படகை நிறுத்தவில்லை என்றும், வழக்கமான நடைமுறையின்படி படகை நிறுத்தும் வகையில் எச்சரிக்கைக்காக சுடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see... உயிர்காக்க வேண்டிய 108 வாகனமே 3 உயிர்களுக்கு எமனாக மாறிய சோகம்..!
இதில் மீனவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காயம் அடைந்த மீனவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gun shoot, Indian Navy, Investigation, Mayiladuthurai