ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை..! - மீனவர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை..! - மீனவர் மருத்துவமனையில் அனுமதி!

காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி

காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி

Mayiladuthurai | நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மயிலாடுதுறையை சார்ந்த மீனவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

  இதில் மயிலாடுதுறையை சார்ந்த வீரக்குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

  Also see... உயிர்காக்க வேண்டிய 108 வாகனமே 3 உயிர்களுக்கு எமனாக மாறிய சோகம்..!

  இந்திய கடற்படை வீரர்கள் தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Fisherman, Gun shoot, Indian army, Mayiladuthurai