ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

நடத்தையில் சந்தேகம் : மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது!

நடத்தையில் சந்தேகம் : மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது!

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

Murder husband arrest | மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொலை செய்த கணவனை பாலையூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேல அகலங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சசி (34). இவர் லாரி டிரைவர். இவருக்கும் ரம்யா (28) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கிய சசி மனைவி ரம்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆரோக்கிய சசி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில் மனைவி ரம்யாவை அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

    ' isDesktop="true" id="822509" youtubeid="FIF5-xrMfBo" category="mayiladuthurai">

    Also see... உயிர்காக்க வேண்டிய 108 வாகனமே 3 உயிர்களுக்கு எமனாக மாறிய சோகம்..!

    இது குறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கும் பதிந்து ஆரோக்கிய சசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Husband Wife, Mayiladuthurai, Murder