Home /News /mayiladuthurai /

‘வா சேர்ந்து வாழலாம்’... திருமண நாளில் மனைவியை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய கணவன்

‘வா சேர்ந்து வாழலாம்’... திருமண நாளில் மனைவியை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய கணவன்

மனைவி கொலை- கணவர் கைது

மனைவி கொலை- கணவர் கைது

உடைமைகளை தருவதாக கூறி அழைத்து சென்ற கணவர், மனைவி ரேவதியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Mayiladuthurai
    மயிலாடுதுறையில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் அருள்(49), ரேவதி(45) தம்பதியினர். காதல் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 25 வயதில் 1 மகனும்,18 வயதில் 1 மகளும் உள்ளனர். பேருந்து நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    குடும்பத்திற்கு உதவாத கணவன் அருளை நம்பாமல் அவரது மனைவி ரேவதி வேலைக்கு சென்று பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக ரேவதி பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    ALSO READ | அன்னவாசல் அருகே பாம்பை விரட்டும்போது வெடி பொருட்கள் வெடித்தது... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்

    தினந்தோறும் மது அருந்திவிட்டு அருள்  தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் மல்லிகா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ரேவதியை, தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி அழைத்துள்ளார் கணவர் அருள்.

    அப்போது அவர் அழைப்பை ஏற்க மறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார். உடைமைகளை தருவதாக கூறி அழைத்து சென்றபோது  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

    ALSO READ | திருமணத்திற்கு மறுத்த காதலி.. கொலை செய்து புதைத்த காதலன்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

    இதில் படுகாயமடைந்த ரேவதியை, அக்கம்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, கணவர் அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார் - மயிலாடுதுறை
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Husband Wife, Mayiladuthurai, Murder

    அடுத்த செய்தி