மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியா உள்ள 5 ஒட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் - 05
கல்வி தகுதி : ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்று நடப்பில் இருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ஈப்பு ஓட்டுநருக்கு மாத சம்பளம் ரூ.19,500 முதல் 62,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோருக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 42க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
டவுன்லோடு செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2023 (ஜனவரி 10 ஆம் தேதி) பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் https://mayiladuthurai.nic.in/என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை - 609001.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/12/2022120977.pdf இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job Vacancy, Local News, Mayiladuthurai