ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. காவல் துறை விடுத்த எச்சரிக்கை..!

நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. காவல் துறை விடுத்த எச்சரிக்கை..!

கடல் சீற்றம்

கடல் சீற்றம்

Fisherman Warning | நாளை மறுதினம் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்று மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் காவல் துறை எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென, மயிலாடுதுறை போலீசார் கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

  தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் , நாளை மறுதினம் வரை, கரை வலை மீன் பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல், ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தல் என எந்த விதமான மீன்பிடித் தொழிலும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Also see...தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு..!

  மறு உத்தரவு வந்த பிறகு மீன்பிடிக்க செல்லுமாறும், படகுகளையும் உடைமைகளையும் கரைகளிலேயே பாதுகாப்பாக வைக்குமாறும் மீனவ கிராமங்களில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று தரங்கம்பாடி, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட கிராமங்களில் காவல் துறையினர் வாகனத்தில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Fisherman, Mayiladuthurai, MET warning