Home /News /mayiladuthurai /

கொள்ளிடம் ஆற்று வெள்ள பாதிப்புக்கு முதல்வர் இழப்பீடு அறிவிக்காதது ஏன்? பி.ஆர். பாண்டியன் கேள்வி

கொள்ளிடம் ஆற்று வெள்ள பாதிப்புக்கு முதல்வர் இழப்பீடு அறிவிக்காதது ஏன்? பி.ஆர். பாண்டியன் கேள்வி

பி.ஆர். பாண்டியன்

பி.ஆர். பாண்டியன்

கொள்ளிடம் பாலம் முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளநீர் உடைத்துக்கொண்டு வெளியேறுவதை தடுக்க முன்வர வேண்டும். - பி.ஆர். பாண்டியன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கொள்ளிடம்  ஆற்று  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து முதலமைச்சர் அறிவிக்க மறுப்பது ஏன்? என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் நாதல்படுகை, முதலைமேடு திட்டு,வெள்ளைமணல் உள்ளிட்ட ஆற்றுப்படை கிராமங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

    கொள்ளிடம் வெள்ளநீர் சூழ்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைசந்தித்த போது, காவிரியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத வகையில் நெல், வாழை,சோளம், பருத்தி, காய்கறிகள்,பழ வகைகள் உள்ளிட்ட பணப்பயிர்களும் பூ உள்ளிட்ட தோட்ட பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது.பாதிப்பு குறித்து இதுவரையிலும் கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்தான எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் அறிவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை

    இரண்டு ஆண்டுகளாக குருவை காப்பீடு செய்வதை தமிழக அரசு கைவிட்டு விட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பொறுப்பு ஏற்று நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

    நாதல் படுக்கை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் ஆகிய 3 கிராமங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது ஆண்டுதோறும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க கிராமத்தின் அருகே மேடான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி நிரந்தரமாக குடியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு ஓட்டு வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குடிசை வீடுகளுக்கு ரூபாய் 25000ம் நிதி உதவி வழங்கிட வேண்டும். கிராமங்களை மையமாக வைத்து புயல் வெள்ள பேரிடர் பாதுகாப்பு மண்டபங்களை உடன் அமைத்திட வேண்டும். கொள்ளிடம் பாலம் முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளநீர் உடைத்துக்கொண்டு வெளியேறுவதை தடுக்க முன்வர வேண்டும்.

    தற்குறி.. அரைக்கால் வேக்காடு பேர்வழி.. சாக்கடை அரசியல்.. அண்ணாமலை மீது திமுக ’முரசொலி’ கடும் விமர்சனம்

    மேலும் வெள்ளமணல் கதவணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கல்லணை வரையிலும் ஏழு கிலோமீட்டர் ஓர் இடத்தில்  கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும்,மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்.பாசன ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்திட வேண்டும்.

    தமிழக அரசு ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பி காவிரி கொள்ளிடம் கரைகளின் அருகே பஞ்சப்பட்டி ஏரி முதல் வெளிங்டன் ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் உரிய பாசன வசதியை செய்து உபரி நீரை நிரப்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான திட்டமிடலை உடன் துவங்கிட வேண்டும் என்றார்.
    Published by:Musthak
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி