Home /News /mayiladuthurai /

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மறைவுக்கு துர்கா ஸ்டாலின் அஞ்சலி..

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மறைவுக்கு துர்கா ஸ்டாலின் அஞ்சலி..

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மறைவுக்கு துர்கா ஸ்டாலின் அஞ்சலி..

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மறைவுக்கு துர்கா ஸ்டாலின் அஞ்சலி..

மயிலாடுதுறையில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாலை விபத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன் உடலுக்கு தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா  ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாளுக்கு வீட்டின் வாசலிலேயே சிலை அமைத்து வழிபட்டு வந்ததன் மூலம் இப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர்.

    இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி தனது 73-வது பிறந்தநாளை தனது தாய், மனைவியின் சிலை முன்பு கொண்டாடினார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மயிலாடுதுறையில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து, மதன்மோகனின் உடல் மயிலாடுதுறையில் அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்காவதி ஸ்டாலின், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம், தமிழக அரசு கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன்(பூம்புகார்), எஸ்.ராஜகுமார்(மயிலாடுதுறை), சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Durga Stalin, Mayiladuthurai

    அடுத்த செய்தி