Home /News /mayiladuthurai /

கீழப்பெரும்பள்ளம் அங்காள அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. துர்கா ஸ்டாலின் பங்கேற்பு..

கீழப்பெரும்பள்ளம் அங்காள அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. துர்கா ஸ்டாலின் பங்கேற்பு..

அங்காள அம்மன் கோவில் கும்பாபிஷேகம்... துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

அங்காள அம்மன் கோவில் கும்பாபிஷேகம்... துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

Mayiladuthurai | துர்கா ஸ்டாலின் கொடியசைக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட குடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India
    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோவில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது.

    அதனை அடுத்து துர்கா ஸ்டாலின் கொடியசைக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட குடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன்,  நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் என பலரும்  கண்டு தரிசனம் செய்தனர்.

    Also see... புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை சுற்றிலும்  எஸ் பி நிஷா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி இரா லலிதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Durga Stalin, Mayiladuthurai

    அடுத்த செய்தி