Home /News /mayiladuthurai /

வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டிய குடும்பம்... கடப்பாரையால் பூட்டை உடைத்து மீண்டும் குடியேறி போராட்டம் நடத்தும் பெண்!

வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டிய குடும்பம்... கடப்பாரையால் பூட்டை உடைத்து மீண்டும் குடியேறி போராட்டம் நடத்தும் பெண்!

பிரவீனா

பிரவீனா

வீட்டிற்கு வந்து மாடுகளை மட்டும் பராமரித்துவிட்டு செல்லும் கணவரின் குடும்பத்தார் வீட்டின் உள்ளே விடாததால் ஆத்திரமடைந்த பிரவீனா இன்று பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து தன் கணவர் வீட்டில் குடியேறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India
    மயிலாடுதுறை அருகே வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதுடன், மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டிவிட்டு சென்ற குடும்பத்தினர். வீட்டு திண்ணையில் 20 நாளாக படுத்துறங்கி போராட்டம் நடத்திய இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு பொதுமக்கள் முன்னிலையில் பூட்டை உடைத்து வீட்டில் மீண்டும் குடியேறினார்.

    திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர்  பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.  பெண் வீட்டார் சார்பில், 24 பவுன் நகை, ராயல் என்பீல்டு பைக் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள் ஆகியவை வரதட்சனையாக கொடுக்கப்பட்டுள்ளது.

    நடராஜன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நிலையில் பிரவீனாவை தனியாக வீட்டில் விட்டு  வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமான மூன்றே மாதங்களில் நடராஜன் குடும்பத்தினர் மேலும் வரதட்சனை கேட்டு பிரவீனாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் கணவர் வீட்டில் இல்லாத நிலையில் கணவரின் தம்பி சதீஷ், பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை பிரவீனா தன் கணவரிடம் கூறியபோது அவரை நம்பாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்டுகொண்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து நடராஜன் குடும்பத்தினர், பிரவீனாவை அவர் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

    இதையும் வாசிக்க: திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை - ஜே.பி.நட்டா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்

    திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது, தன் கணவன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தன்னுடன் வாழ வைக்ககோரியும் பிரவீனா கணவர் வீட்டு வாசலில் 20 நாளாக படுத்து உறங்கி வாழ்ந்து வருகிறார். ஊர் பெரியவர்கள் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் மதிக்காததால் வியாழன்கிழமையன்று மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் பொதுமக்களுடன் வந்து பிரவீனா புகார் மனு அளித்தார்.

    வீட்டிற்கு வந்து மாடுகளை மட்டும் பராமரித்துவிட்டு செல்லும் கணவரின் குடும்பத்தார் வீட்டின் உள்ளே விடாததால் ஆத்திரமடைந்த பிரவீனா இன்று பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து தன் கணவர் வீட்டில் குடியேறினார்.

    தனது கணவர் இதுநாள் வரை எங்கிருகிறார் என்று தெரியவில்லை. எதனால் தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள், தன்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறினார். மேலும் தனது கணவரை கண்டுபிடித்து கொடுத்து அவருடன் வாழவையுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    செய்தியாளர் : கிருஷ்ணகுமார்  (மயிலாடுதுறை)

     
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Dowry, Mayiladuthurai

    அடுத்த செய்தி