முகப்பு /செய்தி /Mayiladuthurai / பெற்றோர் புறக்கணிப்பு, ஆதரவு இல்லத்தில் கல்வி... கைகள் இல்லாமலும் பொதுத்தேர்வில் சாதித்த தன்னம்பிக்கை மாணவி

பெற்றோர் புறக்கணிப்பு, ஆதரவு இல்லத்தில் கல்வி... கைகள் இல்லாமலும் பொதுத்தேர்வில் சாதித்த தன்னம்பிக்கை மாணவி

மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி

மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி

மயிலாடுதுறையில் இரண்டு கைகள் இல்லாததால் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட மாணவி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மயிலாடுதுறையி ல்தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவு இல்லத்தில் வளர்ந்து  இரண்டு கைகள் இல்லாத போதும், நம்பிக்கையுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மயிலாடுதுறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமி என்ற மாணவி  இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு

பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் இவர், இரண்டு வயது குழந்தையாக  இருந்ததில் இருந்து  தற்போது வரை வளர்ந்து வருகிறார்.

இரண்டு கைகள் இல்லாத நிலையில் சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியை காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

First published:

Tags: 12th Exam results, Mayiladuthurai