சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் 14 பேர் இந்த வருடம் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அவ்வாறு நகை அடமானம் வைத்தவர்கள் தங்களது நகையை திரும்ப பெறுவதற்கு பணத்துடன் அங்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உங்களது பெயரில் நகை இல்லை எனவும் அடமானம் வைத்த தொகையோடு கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த தமிழ்மாறன் இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், கடந்த ஜூன் மாதம் 21.8 கிராம் எடை கொண்ட தங்க நகையை ரூ.60,000 க்கு அடமானம் வைத்ததாகவும் அந்த நகையை மீட்பதற்க்கு சென்று மணப்புரம் பைனான்ஸில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டால் நகை உங்களது பெயரில் இல்லை எனவும் அடமானம் வைத்த தொகையோடு ரூ.18200 கூடுதலாக தனலட்சுமி என்பவர் பெயரில் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மொத்தம் 78,200 ரூபாய் கொடுத்தால் நகையை திருப்பி தருவதாக பணியில் இருப்பவர்கள் கூறுவதாகவும் இது குறித்து விசாரணை செய்து எனது நகையை மீட்டு தரும்படி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவன மேலாளர் விக்ரமிடம் நியூஸ் 18 செய்தியாளர்தொலைபேசி வாயிலாக கேட்கும் பொழுது, நான் பணியில் தற்பொழுதுதான் சேர்ந்துள்ளேன். இதற்கு முன்பு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த விமல்ராஜ் என்பவர் 14 பேர் நகையை வேறு ஒருவர் பேரில் மாற்றி வைத்து கூடுதல் தொகை பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக நிறுவனத்தின் சார்பாக விமல் ராஜின் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் மாறனின் நகை தனலட்சுமி என்பவர் பெயரில் மாற்றி வைக்கப்பட்டது குறித்து தற்பொழுது மயிலாடுதுறை மணப்புரம் பைனான்ஸில் மேலாளராக பணிபுரிந்து வரும் தனலட்சுமியிடம் நியூஸ் 18 செய்தியாளர் தொலைபேசி வாயிலாக கேட்கும் பொழுது இதற்கு முன்பு பணிபுரிந்த விமல்ராஜ் என்பவர் தனது பெயரில் நகையை மாற்றி வைத்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Also see... மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியர் இடமாற்றம்
அவசர தேவைக்காக தனது நகையை அடமானம் வைத்து விட்டு மீண்டும் நகையை மீட்க முடியாத சூழலில் தமிழ்மாறன் தற்பொழுது தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து சீர்காழி போலீசார் உரிய விசாரணை செய்து அவரது நகையை மீட்டு தர வேண்டும் என்பதே தமிழ்மாறனின் கோரிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Crime News, Gold loan, Sirkazhi