ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை... மயிலாடுதுறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு...

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை... மயிலாடுதுறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு...

நெய் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு

நெய் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு

Central team inspection at mayiladuthurai district | மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவை பருவத்தில் 96,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இவற்றில் பெரும்பான்மையான இடங்களில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக எடுத்து வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்து வருகின்றனர்.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

  Also see...சென்னை வந்த துணிவு அஜித்.. ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள்

  மத்திய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் எம்.இஸட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர் உதவி மேலாளர் குணால் குமார், முதுநிலை மேலாளர் செந்தில், உள்ளிட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவுடன் இணைந்து இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

  இதில் விவசாயிகள் சிவக்குமார், மணிவண்ணன் ஆகியோரது நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தபோது, அவற்றில் 20 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது நுகர்வோர் வாலிபக் கழக துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு மதுரநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Central Team, Farmers, Mayiladuthurai, Paddy fields