ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

இருசக்கர வாகனத்துக்குள் சீறிய சாரைப் பாம்பு! லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட இளைஞர்!

இருசக்கர வாகனத்துக்குள் சீறிய சாரைப் பாம்பு! லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட இளைஞர்!

இருசக்கர வாகனத்துக்குள் சீறிய சாரைப் பாம்பு!

இருசக்கர வாகனத்துக்குள் சீறிய சாரைப் பாம்பு!

இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்று பழமொழி உண்டு. பொதுவாக மழைக்காலத்தின் ஊர்வனவற்றின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என சொல்வார்கள். அதனால் தான் பைக் கார் போன்ற வாகனங்களை சுத்தமாக வைத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறுவார்கள். ஏனென்றால் பாம்பு ஒன்று உங்க பைக்கினுள் வந்து குடியிருக்க கூட வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் தனது வீட்டு வாசலில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்ல முற்பட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் பாம்பு  இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புளிச்சக்காடு பகுதியை  சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் தினேஷுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக தினேஷ் அங்கு வந்து இருசக்கர வாகனத்தில் டேங்க் பகுதியில் புகுந்திருந்த மூன்று அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பை பாட்டிலில் அடைத்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டார்.

இதையும் படிங்க : தொடர் கனமழை.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கி சென்றுள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Mayiladuthurai, Snake, Viral