ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த முதல்வர்!

சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த முதல்வர்!

சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  சீர்காழியின் எருக்கூரை சேர்ந்த ராமு-சங்கீதா தம்பதியரின் மகள் அச்சுதா. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, காணாமல் போனார். இதற்கிடையே, வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கதவணை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

  இதனை அடுத்து மீட்கப்பட்ட குழந்தையை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தை அச்சுதாவின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

  வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தற்போது பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சிறுமி வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  Also see... கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

  ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM MK Stalin, Girl Child, Mayiladuthurai, Sirkazhli