கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சீர்காழியில் 18 தனியார் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்து இருப்பதை கண்டித்து சமூக வலைதளங்களில் போராட்டம் அறிவித்திருந்த சீர்காழி நகர வணிகர் சங்க தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி, மர்மமான முறையில் உயிரிழந்தார். இதை கண்டித்து அந்த மாணவியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் கலவரமாக மாறியதால் சம்பந்தப்பட்ட பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த பேருந்துகள், வகுப்பறைகளில் இருந்த மேஜைகள் மற்றும் சான்றிதழ்கள் என ஏராளமான பொருட்களை போராட்டக்காரர்கள் தீக்கு இரையாக்கினர். அத்துடன், ஒரு தரப்பினர் ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளையும் திருடிச் சென்றனர்.
இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று இயங்காது என தனியார் பள்ளி சங்கங்கள் அறிவித்திருந்தன. இதற்கு அரசு, தனியார் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் விடுமுறை அளித்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அரசு உத்தரவை ஏற்று தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வந்தாலும் ஒரு சில தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, சீர்காழி கல்வி மாவட்டத்தில் உள்ள 34 தனியார் பள்ளிகளில் 18 பள்ளிகள் இயங்கவில்லை. குறிப்பாக பெரிய தனியார் பள்ளிகளாக கருதப்படும் விவேகானந்தா, பெஸ்ட் உள்ளிட்ட பள்ளிகள் இயங்கவில்லை. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக WhatsApp குழுக்கள் மூலம் இன்று பள்ளி விடுமுறை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக சீர்காழி வணிகர்கள் மற்றும் பெற்றோர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம், சீர்காழி நகர வணிகர் சங்கத் தலைவர் விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில், அரசு உத்தரவை மீறி ஏன் சீர்காழியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் தன்னிச்சையாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தார்.
இதனை அறிந்த சீர்காழி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி நகர வணிகர்கள் சங்க தலைவர் விஜயன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் கைது
Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்..
அதே சமயம், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்கள் நலன் கருத்தில் கொள்ளாமல் அரசின் உத்தரவை மீறி மூடப்பட்டிருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் சீர்காழி காவல் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.