ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

சீர்காழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சீர்காழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்க்ப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வடியாததால் மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sirkali (Sirkazhi), India

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கன மழை பெய்த காரணத்தினால், பள்ளிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.

  Also see... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலெர்ட்

  சீர்காழியில் கடந்த வாரம் ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy Rainfall, Mayiladuthurai, School, School Leave