ஹோம் /நியூஸ் /மதுரை /

ரயில்வேயில் வேலை என கூறி பல லட்சம் மோசடி செய்த முன்னாள் இராணுவ வீரர் மற்றும் பெண் காவலர்: பணத்தை இழந்தவர்கள் புகார்

ரயில்வேயில் வேலை என கூறி பல லட்சம் மோசடி செய்த முன்னாள் இராணுவ வீரர் மற்றும் பெண் காவலர்: பணத்தை இழந்தவர்கள் புகார்

 முன்னாள் இராணுவ வீரர்  - அவரது மனைவி மீது புகார்

முன்னாள் இராணுவ வீரர் - அவரது மனைவி மீது புகார்

Madurai | இந்திய ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் இராணுவ வீரர் மற்றும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐ.ஜி. அலுவலகத்தில் இளைஞர்கள் புகார் அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூடலிங்கம் மற்றும் மதுரை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் அவரது மனைவி கார்த்திகை செல்வி ஆகியோர் அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் சிலரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 2019 மே மாதம் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 7 இளைஞர்களிடம் வடகிழக்கு இந்தியன் ரயில்வேயில் டிராக் மேன் (Track man) வேலையும், வனத்துறையில் வன அதிகாரி (Forest Guard) வேலையும் வாங்கி தருவதாக கூறி தலா 4 முதல் 6 லட்சம் வரை என மொத்தம் சுமார் 32 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.

பணம் பெற்ற நபர்களுக்கு, பணி ஆணைக்கான ஆவணங்களை போலியான அரசு முத்திரையுடன் தயாரித்து வழங்கி, 2019 செப்டம்பரில் அவர்கள் அனைவரையும், பயிற்சி அளிப்பதாக கூறி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் மூன்று மாத காலம் தங்க வைத்துள்ளனர்.

Also see...நைனாமலை கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது

ஆனால், பயிற்சியோ ஊக்க தொகையோ எதுவும் அளிக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்தவர்கள் விசாரித்த போது அனைத்தும் போலி என்பதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தனர். பின்னர் அந்த இளைஞர்கள் கொடுத்த பணத்தை கேட்ட போது மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரையில் தென்மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் புகாரளித்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Army man, Cheating case, Job, Madurai, Railway