ஹோம் /நியூஸ் /மதுரை /

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடிய வாலிபர்.. மதுரையில் பரிதாபம்!

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடிய வாலிபர்.. மதுரையில் பரிதாபம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Train Accident | சென்னைக்கு வேலை தேடி சென்று கொண்டிருந்த போது பாண்டியன் எக்ஸ்பிரம் விரைவு ரயிலில் இருந்து தவறி முட்புதருக்குள் விழுந்து படுகாயமடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Sholavandan

மதுரை சோழவந்தான் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முட்புதரில் விடிய விடிய உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை அவரது உறவினர்கள் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (17) 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்த நிலையில், பிரபாகரன் வேலைதேடி சென்னைக்கு செல்ல முயற்சித்தார். இதற்காக நேற்று முன் தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி நண்பர்களுடன் சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது சோழவந்தான் அருகே சென்று கொண்டிருந்த போது பிரபாகரன் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதில் அவர் முட்புதருக்குள் விழுந்து படுகாயமடைந்தார். இதனால் எழுந்திருக்க முடியாமல் படுகாயங்களுடன் விடிய விடிய முட்புதரிலேயே தவித்து கொண்டிருந்தார். இதற்கிடையே பிரபாகரனின் உறவினர்கள் பல முறை முயற்சித்தும் பிரபாகரன் போனை எடுக்காததால், அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு பிரபாகரன் எங்கே என கேட்டுள்ளனர். அவரை சோழவந்தானில் இருந்தே காணவில்லை என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு துடித்து போன உறவினர்கள் சோழவந்தான் ரயில்வே கேட் அருகே பிரபாகரனை தேடி சென்றனர். அங்கு அவர் முட்புதரில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Accident, Local News, Madurai, Sholavandan