Home /News /madurai /

மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி.. தனியாக துண்டிக்கப்பட்ட தலை - மூவர் கைது

மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி.. தனியாக துண்டிக்கப்பட்ட தலை - மூவர் கைது

மதுரை

மதுரை

Madurai : மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும் போது தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது

    மதுரை விளாங்குடி அருகே மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பதிக்கும் பணியானது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று காலை முதல் 3 தொழிலாளர்கள் அதற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அமராவதி நகரைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (34) என்பவர் பணி செய்து வந்த நிலையில், மதியம் 3 மணி அளவில்  எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

    இதனால் 20 அடி ஆழத்தில் கீழே விழுந்த சதீஷ் மீது மண் மூடப்பட்டதால், உடன் இருந்த சக பணியாளர்கள் சதீசை காப்பாற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது அவருடைய தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சதீசின் உடலை மீட்பதற்காக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர், 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர்  உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் விசாரணை  மேற்கொண்டனர்.

    Also Read: என் சாவுக்கு தனியார் வங்கிதான் காரணம் - உருக்கமாக வீடியோ வெளியிட்டு ஜவுளிவியாபாரி தற்கொலை

    மேலும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் செய்தியாளர்களிடம் கூறுகையில்," விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பார்கள்,ஒப்பந்ததாரர் மீது தவறு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ACCPL ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன்,  மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய  4 பேர் மீது  வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. மேலும், 304 (A) அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடல் புதூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

    செய்தியாளர்: ஹரி கிருஷ்ணன் (மதுரை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cleaning Drainage, Crime News, Death, Madurai, Police

    அடுத்த செய்தி