ஹோம் /நியூஸ் /மதுரை /

‘மீண்டும் உயிர்த்தெழுவார்’ - பெண்ணின் சடலத்துடன் வாழ்ந்த கணவன், மகன்கள்!

‘மீண்டும் உயிர்த்தெழுவார்’ - பெண்ணின் சடலத்துடன் வாழ்ந்த கணவன், மகன்கள்!

வீட்டின் ஃப்ரிட்ஜிக்குள் வைக்கப்பட்ட பெண்ணின் சடலம்

வீட்டின் ஃப்ரிட்ஜிக்குள் வைக்கப்பட்ட பெண்ணின் சடலம்

Madurai News | மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

    மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன்(64). அவரது மனைவி மாலதி(55) மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் மூத்தவர் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளையவர் சிவசங்கர் தேனி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி நவ.8 அன்று காலை உயிரிழந்துள்ளார். பின், மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

    இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், மீண்டும் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் வந்து போலீசார் எச்சரித்த பின்னர், மாலதியின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு உடலை குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர்.

    இதையும் படிங்க : இறந்த ராணுவ வீரருக்கு அரசு இழப்பீடு : பங்கு கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற மாமனார், கொழுந்தன்!

    போலீசார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்துபோன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    .

    Published by:Karthi K
    First published:

    Tags: Crime News, Madurai