Home /News /madurai /

திருமங்கலத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி- வடமாநில இளைஞர்கள் அட்டூழியம்

திருமங்கலத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி- வடமாநில இளைஞர்கள் அட்டூழியம்

ரயில் நின்றதால் காத்திருக்கும் பயணிகள்

ரயில் நின்றதால் காத்திருக்கும் பயணிகள்

Thirumangalam | மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்த வடநாட்டவர் குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India
    திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி லட்சுமி(51). இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உறவினர் வீட்டிற்கு தனது கணவருடன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமங்கலம் அருகே ஆறுகண் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க மூன்று வடநாட்டவர் லட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முற்பட்டனர்.

    இதில் ஒருவர் ரயிலில் அவசரச் சங்கிலியை இழுத்து நிறுத்தி உள்ளார். லட்சுமி சுதாரித்துக் கொண்டதால் நகை தப்பியது இதற்கிடையே அவசர சங்கிலியை இழுத்ததால் ரயில் குண்டாற்று பாலத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் 3 வடநாட்டவரும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    Also see... முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சவால் விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்...

    இதனால் அரை மணி நேரம் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



    தொடர்ந்து அரை மணி நேர தாமதத்திற்கு பின்பு ரயில் கிளம்பி சென்றது. பின்னர் மதுரை ரயில்வே நிலையத்தில் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வடநாட்டவர் குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சிவக்குமார் தங்கையா, திருமங்கலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Jewels, Railway, Robbery, Thirumangalam

    அடுத்த செய்தி