Home /News /madurai /

மாணவர்களின் நலனுக்காக ஃப்ரீ ஃபயர் கேம்மை ஏன் தடை செய்ய கூடாது? நீதிபதிகள் கேள்வி

மாணவர்களின் நலனுக்காக ஃப்ரீ ஃபயர் கேம்மை ஏன் தடை செய்ய கூடாது? நீதிபதிகள் கேள்வி

 ஃப்ரீ ஃபயர்

ஃப்ரீ ஃபயர்

Free Fire | ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறையின் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
கல்லூரி மாணவ மாணவியரிடையே தவறான பழக்க வழக்கத்தையும், மாணவர்களை ஏமாற்றி சீரழிக்கும் கும்பலிடம் இருந்து காப்பாற்ற இணையத்தில் மாணவர்களால்  விளையாடப்படும் ஃப்ரீ ஃபயர் கேம்-ஐ பதிவிறக்கும் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவியின் தாய்,  உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஃப்ரீ ஃபயர் கேம் விளையாட்டில் ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கடத்தி செல்லப்பட்ட தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிட கோரி மனுவில் கூறி உள்ளார்.

இந்த  ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாணவியர் வாழ்க்கையை சீரழிக்கும்,  இணையத்தில் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்ப ட்டு விளையாடப்படும் ஃப்ரீ ஃபயர் கேம்மை இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்.

கல்லூரி மாணவ மாணவியரிடையே தவறான பழக்க வழக்கத்தையும்,  மாணவிகளை ஏமாற்றி சீரழிக்கும் கும்பலிடம் இருந்து காப்பாற்ற, இந்த ஃப்ரீ ஃபயர் கேம்மை இந்தியாவில் பதிவிறக்கும் செய்ய  தடை செய்ய வேண்டும். ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறையின் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கும் , நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கும்  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...தனியார் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றி வந்த வாகனத்தில் திடீர் புகை

மேலும் மாணவி எங்கு உள்ளார் என்பது குறித்து,  குமரி மாவட்ட S.P.பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Game, Madurai, Madurai High Court

அடுத்த செய்தி