கூட்டு தலைமையால் குழப்பம் வரும், எனவே ஒற்றை தலைமையால் தான் தீர்க்கமான முடிவு எடுத்து, திமுகவை எதிர்க்க முடியும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான முடிவுஎடுப்பார் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை பிரச்சினையால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கும் இந்த சூழலில் இன்று காலை 12மணிக்கு மேல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மதுரையில் இருந்து, தேனி நோக்கி சுற்றுப்பயணம் செல்கிறார்.
இந்த நிலையில், மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஏழை எளிய மக்களுக்காக அதிமுக தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து உள்ளது. அதன் பிறகு அதிமுகவை மக்கள் இயக்கமாக புரட்சி தலைவி ஜெயலலிதா உருவாக்கினார்.
அதன் பிறகு எளியவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி, தமிழத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஆட்சியை சிறப்பாக செயல்படுத்திய நிலையில், அதன் பிறகு தற்போது எதிர் கட்சியாக உள்ள நிலையில் முடிவு எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது உள்ள இரட்டை தலைமையால் குழப்பம் நிலவுகிறது.
அனுபவ ரீதியாக இரட்டை தலைமையால் குழப்பம் நீடித்தது. கூட்டு தலைமையால் குழப்பம். எனவே ஒற்றை தலைமையால் தான் தீர்க்கமான முடிவு எடுத்து, திமுகவை எதிர்க்க முடியும்..
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான முடிவு எடுப்பார். ஆனால் பொருளாளர் பன்னீர்செல்வம், தொண்டர்களுடைய சுமையை சுமக்க விரும்பவில்லை.
திமுக ஒரு தீய சக்தி. திமுகவை தீர்க்கமாக எதிர்ப்பவர்களுக்கு தான் அதிமுகவில் ஆதரவு. திமுகவின் குடும்ப அரசியலில் இருந்து மீட்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற படிகட்டுகளில் ஏறி இறங்கி பல சோதனைகளை கண்டார்.
தேனி எம்.பி.ரவீந்திரநாத், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆட்சி சிறப்பாக இருக்கிறது என பாராட்டினார். இது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?
சசிகலாவை ஏன் அதிமுகவில் சேர்க்க வேண்டும்? டிடிவியை ஏன் சந்திக்க வேண்டும். சந்தேகமுள்ள தலைமையை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. மன உறுதியுடன் கட்சியை வழி நடத்த வேண்டும்.
இதுவரை பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் முன்வரவில்லை. பேச்சு வார்த்தைக்கு வரமறுக்கிறார். சினிமாவில் நம்பியாரை வில்லனாக பார்த்தனர். ஆனால் உண்மையில் அவர் நல்லவர். அதுபோல் தான் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழுவை தடை செய்ய வழக்கு போட்டவர், ஏன் பொதுக்குழுவிற்கு வர வேண்டும்? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணன் என்று தான் அழைத்தார். பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது சில விரும்பத்தகாத சம்பவம் நடந்து உள்ளது. அதை யாரும் ஆதரிக்கவில்லை. அவமானப்படுத்தப்பட்டார் என இதை வைத்து அரசியல் செய்ய கூடாது.
அதிமுகவில் நடப்பது குஸ்தி சண்டை. இதில் பலமான எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். தீதும் நன்றும் பிறர் தர வாரா. இரட்டை தலைமையால் ராஜ்யசபா எம்.பி தேர்வில் தீர்க்கமான முடிவு எடுக்க இயலவில்லை. சாதிய ரீதியாக அதிமுக பிளவு பட உள்ளது என்பதை ஏற்க முடியாது.
2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்க கூடியவர்கள். இவர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்வார்கள். ஓபிஎஸ்சை தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுத்தால் கட்சியும், ஓ.பன்னீர்செல்வமும் பசுமையாக இருக்கலாம். இல்லையேல் கட்சி பசுமையாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வம் பசுமையாக இருக்க மாட்டார்.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தேர்வு செய்யும் கூட்டமாக, வரும் பொதுக்குழு கூட்டம் இருக்கும் என்று அவர் கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.