மதுரை மாவட்டத்தில் நடந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கேள்வி எழுப்பினார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், பெரிய புள்ளான், தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், அய்யப்பன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : மதுரை நகர அமைப்பை விவரித்து போற்றும் சங்க பாடல் உங்களுக்கு தெரியுமா?
இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கைகளின் சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது" என பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து செல்வதாக வெளியே செல்ல முற்பட்டனர். அப்போது அமைச்சர் மூர்த்தி அவர்களை சமரசம் செய்து அமர வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மக்கள் பிரச்சனை குறித்து பேசினால் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு அதிகாரி போலவே பேசுகிறார். மதுரையில் 2 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளது. நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்க போகிறது என தெரியவில்லை. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி விளம்பரத்துக்காக சட்டையை கிழிக்க மாட்டார், மக்களுக்காகவே மக்களிடையே பிரச்சனைகள் குறித்து பேசுவார்" என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Sellur Raju