முகப்பு /செய்தி /மதுரை / ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: விஜயபாஸ்கர் தொடர்புடைய பத்திகளுக்கு இடைக்கால தடை!

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: விஜயபாஸ்கர் தொடர்புடைய பத்திகளுக்கு இடைக்கால தடை!

விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி

விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையத்தில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ஆறுமுகசாமி ஆணையத்தால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்ட கருத்துகள் அனைத்திற்கும் இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் குற்றஞ்சாட்டப்படுபவர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பான விசாரணை அறிக்கையில் தனது பெயரை சேர்த்ததற்கு தடை கோரி விஜயபாஸ்கர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி ஆணையம் குற்றவாளிக்கான சம்மனை விஜயபாஸ்கருக்கு வழங்கவில்லை எனவும், மாறாக சாட்சியத்திற்கான சம்மனை மட்டுமே வழங்கியதாக தெரிவித்தார்.

குற்றவாளிக்கான சம்மனை அனுப்பி இருந்தால், ஆணையத்தில் குறுக்கு விசாரணை செய்து குற்றசாட்டுகளை ஆதாரத்துடன் விஜயபாஸ்கர் மறுத்து இருப்பார் என்றும் குறிப்பிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஆறுமுகசாமி ஆணையத்தில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒத்திவைத்தார்.

First published:

Tags: Arumugasamy commission, Madurai High Court, Vijaya Baskar