ஹோம் /நியூஸ் /மதுரை /

“வாரிசா.. துணிவா..” போஸ்டர்களில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் ரசிகர்கள்.. மதுரையில் பரபரப்பு...

“வாரிசா.. துணிவா..” போஸ்டர்களில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் ரசிகர்கள்.. மதுரையில் பரபரப்பு...

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Madurai Vijay - Ajith Fans : மதுரையில் போஸ்டர்களில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் என விஜய் அஜித்திற்கு இளைஞர்கள் பட்டாளமே உண்டு. சமீப காலத்தில் பொங்கல் தின பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படும் என இரு தரப்பினரிடமும் இருந்து செய்தி வெளியானது.

2014ம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், அஜித் நடித்த வீரம் திரைப்படமும் பொங்கல் பண்டிகையில் வெளியானதையடுத்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் விஜய் மற்றும் அஜித் திரைப்படம் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம்,பெத்தானியாபுரம், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் சில போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

போஸ்டர்களில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் ரசிகர்கள்

அதில், "ஒருவனுக்கு பின்னால் நிற்பவன் அல்ல நீ! துணிவுடன் முன்னால் நிற்பவன் நீ!" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை அடங்காத அஜித் குரூப் ரசிகர்களும், "தம்பிகளா உங்கள் அண்ணன் படம் ஓட அவர் உங்கள சந்திக்கணும்! எங்க அண்ணன் 'துணிவு' கூட மோதனுமானோ நான் நீங்க கொஞ்சம் சிந்திக்கணும்!" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஆசை நாயகன் அஜித் நற்பணி இயக்கம் ரசிகர்கள் ஒட்டி இருந்தார்கள்.

இதையும் படிங்க : மதுரை-கோயம்புத்தூர் ரயிலின் பயண நேரம் குறைப்பு... வேகம் அதிகரிப்பு

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம் பெத்தானியாபுரம் போன்ற பகுதிகளில் "உங்களுக்கு துணிவு படம் வந்தா தான் மாஸ்.., AKவுக்கே குட்டி கதை சொல்லித் தருவார் எங்கள் வாரிசு பாஸ்..," என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், "தம்பிகளா' உங்க அண்ணனுக்கு துணிவு இருந்தா முதல்ல உங்கள சந்திக்கச் சொல்லு! அப்படி உங்க அண்ணனுக்கு துணிவு இல்லன்னா எங்க அண்ணனை பார்த்து சிந்திக்க சொல்லு! மேலும் சந்திச்சாச்சு! சிந்திச்சாச்சு! என அஜித் ரசிகர்களை வம்பு இழுக்கும் படி விஜய் ரசிகர்கள் இன்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

போஸ்டர்களில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் ரசிகர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு மதுரையில் பல்வேறு பகுதிகளில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்வதை முன்னிட்டு மாறி மாறி பதிலடி கொடுக்கும் வகையில் முடிவே கிடையாது நிலையில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Local News, Madurai, Tamil Cinema