Home /News /madurai /

மதுரையில் வீரமங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்.. பார்வையாளர்களை கவர்ந்தது

மதுரையில் வீரமங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்.. பார்வையாளர்களை கவர்ந்தது

மதுரை - வீர மங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்

மதுரை - வீர மங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்

Madurai | மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இசையார்ந்த நடன நாடகம் காண்போர் அனைவரையும் கவர்ந்தது.
வேலுநாச்சியார் அவர்கள் மருது சகோதரர்கள் ஆதரவுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். பின்னர், 1789ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார்.

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்  முதலைமச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நாடக கலைஞர்கள் காவிய கதைகள் குறித்தும் வண்ண வண்ண ஒளியில் வசனங்கள் பின்னணியில் உயிரூட்டும் , இசையுடன் நடனம் சேர்ந்து செய்த கலவையாய் நிகழ்த்தப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.



மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சியில் 27.08.2022-அன்று தலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022-அன்று இந்துஸ்தான் கல்லூரியிலும், சிவகங்கை மாவட்டத்தில் 30.08.2022-அன்று அரண்மனை வளாகத்திலும்  நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.



Also see... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்...

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள்,  மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கேடசன் , பூமிநாதன்  மாநகராட்சி துணை மேயர் .நாகராஜன் என பலர் கலந்து கொண்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Minister, Minister Palanivel Thiagarajan

அடுத்த செய்தி