ஹோம் /நியூஸ் /மதுரை /

தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர்... பக்தி பரவசத்தில் மதுரை மக்கள்!

தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர்... பக்தி பரவசத்தில் மதுரை மக்கள்!

வேடுபறி திருவிழா - தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர்

வேடுபறி திருவிழா - தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர்

Madurai kallazhagar | மதுரை கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற வேடுபறி விழாவை ஏராளமான பக்தர்கள் கடும் குளிரில் நடுங்கியபடி கண்டு ரசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை அழகர்கோவிலில் வேடுபறி விழாவுக்காக தங்கக்குதிரையில் எழுந்தருளிய கள்ளழகரை நள்ளிரவு வரை கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் உள்ள அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருகோயிலில் வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்வுகள் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் பகல் பத்து நிகழ்ச்சியில் கள்ளழகர் தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ராப்பத்து நிகழ்ச்சியின் 8ம் நாளான நேற்று கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கை மன்னனை ஆட்கொள்ளும் வேடுபறி நிகழ்ச்சி இரவு 09.00 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை நடைபெற்றது.

திருமங்கை மன்னன், பெருமாளை வழிமறித்து கொள்ளையில் ஈடுபடுவது போன்றும், அவரை ஆட்கொள்வதற்காக பெருமாள் தங்க குதிரையில் எழுந்தருளி போக்கு காட்டி, "ஓம் நமோ நாராயணா" எனும் திருநாமத்தை உபதேசம் செய்து ஆட்கொள்வது போன்ற நிகழ்வும் நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு வரை காத்திருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடனும் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா நிறைவடைய உள்ளது.

First published:

Tags: Festival, Kallazhagar, Local News, Madurai, Vaikunda ekadasi